அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.." - மகா கவி பாரதியார்.
இந்த வரிசையில் பாரதி கம்பனை முதலில் வைத்து பாடியதன் காரணம் கம்பனது கவி திறமை தான் என எண்ணத் தோன்றுகிறது. அந்த கம்பராமாயணத் தில் உள்ள கவிதைகளை நான் படித்த போது அதில்
என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில பாடல் வரிகள் குறித்தும் மற்றும் ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் நான் தொடர் பதிவுகள் இடலாம் என நினைத்தேன். அதன் விளைவே இந்த முதல் பதிவு.
கம்பனைப் பற்றி கற்றறிந்த மேதைகள் எல்லாம் எவ்வளவோ எழுதியவைகள் எண்ணிலடங்கா. அவர்கள் முன்பு என் பதிவு கம்பன் தனது பாலகாண்ட த்தில் அவையடக்கம் என்ற தலைப்பில் பாடிய பாடல்களை ஒத்ததாகும்.
01. பாற்கடலை பார்த்து பூனை தான் அந்த கடலில் உள்ள பால் முழுவதும் குடித்துவிட முடியும் என நினைத்த செயல் போல் கம்பன் மேல் உள்ள பிரமிப்பால் இந்த பதிவு இடுகிறேன்.
"ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென.ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ"
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே."
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’
இறையும் ஞானம் இலாத என் புன் கவி.
முறையின் நூல் உணர்ந்தாரும். முனிவரோ".
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே ".