அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
விசுவாமித்ர மாமுனி தான் நடத்தும் வேள்விக்கு அரக்கர்களால் ஏற்படும் இடையூறுகளை தகர்க்க ராமபிரானை தன்னுடன் அனுப்புமாறு தயரதன் மன்னனிடம் வேண்டுகிறார். இது தயரத மன்னனுக்கு எமன் தன் உயிரை கேட்பது போல் இருந்ததாம். இதை பாலகாண்ட த்தில் கையடைப்படல த்தில் கம்பர் இவ்வாறு பாடுகிறார்.
"தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா. தவம் செய்வோர்கள்வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்."
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
கடுந் துயரம் - கால வேலான்".
என் ஆர் உயிரோ அகலாது
ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன்
மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம்
அவளுக்கு அரசன் அறைவான்'.