அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
நம்மில் பெரும்பாலானோர் க்கு ராமன்,பரதன்,லட்சுமணன், மற்றும் சத்ருக்கனன் இவர்களின் வயது வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா திரையில் அல்லது சின்ன திரையில் அவர்களை நாம் பார்த்து பழகியவிதம் அப்படி. ஆனால் உண்மையில் அவர்கள் நால்வருக்கும் ஒவ்வொரு நாட்கள் தான் வயது வித்தியாசம்.
ராமன் பிறந்தது புனர்பூசம் நட்சத்திரம்.
"ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லை யின் .
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட. வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும். தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே".
" அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் ஜோதியை திரு வுறப்பயந்தனள்-
திறம் கொள் கோசலை".
அதற்கு மறுநாள்
பரதன் பிறந்தது பூசம் நட்சத்திரம் .
"ஆசையும். விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ. வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற, பூசமும் மீனமும் பொலிய. நல்கினாள். மாசு அறு கேகயன் மாது மைந்தனை".
கேகயன் மாது- கைகேயி
அதற்கு மறுநாள்
லட்சுமணன் பிறந்தது ஆயில்யம் நட்சத்திரம்.
"தலை அவிழ் தருவுடைச் சயிலகோபனும். கிளையும். அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற அளை புகும் அரவினொடு அலவன் வாழ்வுற இளையவற் பயந்தனள். இளைய மென்கொடி "
இளைய மென்கொடி- சும த்திரை.
அரவின் என்றால் ஆயில்யம் நட்சத்திரம்.
அதற்கு மறுநாள்
சத்ருக்கனன் பிறந்தது மகம் நட்சத்திரம்.
"படம் கிளர் பல்தளைப் பாந்தள் ஏந்து பார் நடம் கிளர் தர. மறை நவில நாடக மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட. விடம் கிளர் விழியினாள். மீட்டும். ஈன்றனள்".
மீட்டும் ஈன்றனள்- சும த்திரை இரண்டாவதாக சத்ருக்கனை ஈன்றாள் என்பதாகும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் ஜாதகப்படி சத்ருக்கனுக்கு சூரியன் உச்சம் ,சிம்மராசி மகம் நட்சத்திரம் ஆயினும் அவனுக்கு அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டவில்லை.
ராமன் 14 வருட வனவாசம் முடிந்தும் அரசு ஏற்க வரவில்லை என அறிந்து அரச பொறுப்பை துறக்க முற்படும் போது வசிட்டர் முதலானோர் சத்ருக்கனை வேண்ட சத்ருக்கனோ மறுத்து விட்டான்.
ஜாதகப்படி வாய்ப்பு தேடி வந்தபோது அதை ஏற்கவில்லை. சத்ருக்கன் கூறுகிறான் " நிலமகளை துறந்து வனமகளை நாடிச் சென்றவன் பின் சென்றான் ஒரு தம்பி(லட்சுமணன்), அப்படி கானாளச் சென்றவன் வாராது குறித்து வருந்தி உயிர் துறக்க துணிந்தான் ஒரு தம்பி(பரதன்). இப்படி பட்ட தம்பிகளுக்கிடையே வெட்கமில்லாமல் நானோ அரசாள்வ து ?.இது என்னே அரசாட்சி ". என்று வந்த வாய்ப்பை ஏற்க மறுக்கிறான்.
"கானாள நிலமகளை கைவிட்டு போனானை காத்து பின்பு போனானும் ஒரு தம்பி,
போனவன் தான் வரும் அவ திபோயிற்று என்னா ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி, அயலே நாணாது யானாம் இவ்வரசாள்வேன்? என்னே, இவ்வரசாட்சி ! இனி தே அம்மா!".
இடம்-
தென்காசி அன்புடன்
05.08.2021. // க. மாரியப்பன்//