அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
கம்பனது கவித் திறமையை பற்றி கூறுவது என்பது ஒரு நல்ல திரைப்படம் பார்த்த வாய் பேசமுடியாத ஒருவன் அந்த கதையை முழுவதுமாக விளக்கினால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது நான் கொண்ட இந்த முயற்சி.
வாங்க அரும்பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி அன்பான்.
தீம் கவி. செவிகள் ஆரத்
தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு. அவன்புகழ்ந்த நாட்டை.
அன்பு எனும் நறவம் மாந்தி.
மூங்கையான் பேசலுற்றான் என
யான் மொழிய லுற்றேன்.
வானவர் புகழ் வான்மீகி எழுதிய ராம காதையை தான் பாடுவது கள்ளுண்ட ஊமையன் பேசுவது போன்றது என்கிறார் கம்பன் .
கவிஞர் கண்ணதாசன் " இறைவன் ஒருவனே அவன் கல்லாக பார்ப்பவனுக்கு கல், கடவுளாக பார்ப்பவனுக்கு அவன் இறைவன் , அவனை இல்லை என்றால் இல்லை உண்டு என்றால் உண்டு . மனிதன் தான் இறைவன் தான் சார்ந்த மதத்தில் தான் இருக்கிறான் ,என மதச் சண்டையில் ஈடுபடுகிறான்". என்பார். இது கம்பனிடம் இருந்து கண்ணதாசன் அவர்கள் எடுத்து கையாண்ட தே.
பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் வரும் " உள்ளம் என்பது ஆமை " என்ற பாடல் வரிகளில் " தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் அது வெறும் சிலைதான் , உண்டு என்றால் உண்டு ,இல்லை என்றால் அது இல்லை " என்ற வரிகள் மற்றும்
பாவ மன்னிப்பு என்ற படத்தில் வரும் " மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்" என்ற பாடல் வரிகள்.
கம்பன் பாலகாண்டம் ஆற்றுப்படலத் தில்
மலையில் பிறந்த நதி கடலில் கலக்கும் முன் பல்வேறு கிளைகளாக பிரிந்து செல்வதை வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் நதியின் பிறப்பிடம்ஒன்றுதான் என தெரியாமல் தங்கள் பகுதியில் உள்ள நதிதான் அசல் நதி என்பது போல் சரயு நதி ஓடியது என்பார்.
கல்லிடைப் பிறந்து. போந்து.
கடலிடைக் கலந்த நீத்தம்.
எல்லைஇல் மறைகளாலும் இயம்ப
அரும் பொருள்ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி.
துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்
பொருளும்போல். பரந்து அன்றே.
யுத்த காண்டத்தில் உள்ள பாடலில் கடவுள் பற்றி கூறும்போது இப்படி கூறுகிறார் கம்பர்.
'.
| |||||||||||||||
No comments:
Post a Comment