அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை வனவாசம் செல்ல தயரத மன்னன் ஆணையிட்டார் என கேட்டதும் மிகவும் துக்கமும் கோபமும் கொண்டணர். பரதன் எல்லாம் இந்த மண்ணை ஆள முடியாது என கோபத்தில் ஏசினர். ஏன் இந்த அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை நேசிப்ப தும் பரதனை வெறுக்கவும் செய்தனர். இத்தனைக்கும் பரதன் அம்மக்கள் மீது எப்போதும் வெறுப்பு காண்பித்ததே இல்லை.
கம்பன் அயோத்தி நகர மாந்தர்கள் நிலையை ,ராமனை வனவாசம் செல்ல சக்ரவர்த்தி ஆணையிட்டார் என கேட்டபோது , அயோத்தியா காண்டம் நகர்நீங்கு படலத்தில் இவ்வாறு காண்பிக்கிறார்.
"கிள்ளையொடு பூவைஅழுத; கிளர் மாடத்து - உள் உறையும் பூசைஅழுத; உரு அறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என் சொல? - ‘வள்ளல் வனம் புகுவான் ’ என்று, உரைத்த மாற்றத்தால்.
கிள்ளை- கிளி , பூசை- பூனை
ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர் மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே.
‘ஆளான் பரதன் அரசு’ என்பார்; ‘ஐயன், இனி மீளான்; நமக்கு விதி கொடிதே காண்’ என்பார்; கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்’ என்பார்; ‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?’ என்பார்".
ராமன் வனவாசம் செல்ல ஆணையிடப்பட்டான் என்றவுடன் அயோத்தி மாநகரில் உள்ள ஓரறிவு உள்ள உயிரினங்கள் முதல் ஆறறிவு உள்ள மாந்தர்கள் வரை செடி கொடி கிளி பூனை ,யானை முதலிய அனைத்தும் அழுதன. நகர மாந்தர்கள் பரதன் இந்த நாட்டை ஆளமாட்டான் என சபி த்தார்கள்.இதற்கான முக்கிய ஊளவியல் காரணம் எதுவெனில் " மக்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என பார்க்கும் முன்பு அந்த மனிதன் தங்களை(மக்களை) பார்க்கும் போதெல்லாம் நலம் விசாரித்தால் அவன் மீது அவர்களுக்கு ஒரு பாசம் வந்து விடும். அப்போது இந்த நபருடன் தாங்கள் பார்க்காத,அல்லது இவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாத இன்னொரு நபரை பற்றிய விமர்சனம் வரும்போது மக்களின் அனுதாபம், பாசம் பரிவு எல்லாம் அந்த நலம் விசாரிக்கும் நபர் மீதுதான் வரும்.அந்த இரண்டாவது நபர் மீது ஆத் திரம், கோபம் எல்லாம் வரும்.
அதுபோலத்தான் அயோத்தி நகர மாந்தர்கள் ராமனை கொண்டாடினர் பரதனை இகழ்ந்தனர்.
ராமன் சிறு வயதில் இருந்து தன் எதிர் வரும் மக்களை கண்டவுடன நலம் விசாரிப்பான். "நீங்கள் நலமா? உங்கள் மனைவி மக்கள் நலமா? வேலை எப்படி? குறைகள் ஏதும் உள்ளதா?" என்று. இதை கம்பன் தனது பாலகாண்டத்தில் திரு அவதார படலத்தில் இப்படி கூறுகிறார்.
"எதிர் வரும் அவர்களை எமையுடை இறைவன். முதிர் தரு கருணை யின் முகமலர் ஒளிரா. ‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்? மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே".
இந்த வழியை அரசியலில் எம்ஜிஆர் அவர்கள் கடைப்பிடித்து வெற்றி கண்டார். இந்த வழியை சிவாஜி அவர்கள் கடைப்பிடிக்காததால் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நல்லவனா , கெட்டவனா என்று தனது சுயநலம் சார்ந்தே தீர்மானிக்கிறான் என்பது கம்பனின் முடிவு.
No comments:
Post a Comment